என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியிருப்புகள்-சாலைகளில் சுற்றி திரிந்த காட்டு யானைகள்
- வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
- வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது.
வடவள்ளி
கோவை தொண்டா முத்தூர் அருகே தாளியூர் பகுதியில் இன்று அதிகாலையில் குட்டிகளுடன் 5 யானைக்கூ ட்டங்கள் வனத்தை விட்டு வெளியே வந்தது. இதனையடுத்து யானைக்கூட்டங்கள் முடுவு வனப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்கு புகுந்தது.
மேலும் தாளியூர் பள்ளம் வழியாக கருப்பராயன் கோவில் வரை யானை கூட்டம் முகாமிட்டு நின்றது. யானை கூட்டத்தின் சத்தம் கேட்டு அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் சிலர் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 1 மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை சுடுகாட்டு பள்ளம் வழியாக துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்க்கு பிறகு யானை கூட்டத்தை வனத்துறையினர் விரட்டினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டத்தை வனத்திற்கு விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது. யானை கூட்டத்தை கண்ட ஊர் பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் புகை படம் மற்றும் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
மேலும் அட்டுகள் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அங்குள்ள ஜெயபிரகாஷ் தோட்டம், ஓவியக் கல்லூரி ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.