search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி  மாவட்டங்களில் பரவலாக மழை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முற்றிலும் மழை நின்று கடும் வெயில் அடித்து வந்தது.
    • நெல்லை, தென்காசி மாவட்டத்தின் அணை பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தாலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய அளவில் பெய்யாமல் உள்ளது.

    தொடக்கத்தில் பரவலாக பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக முற்றிலும் மழை நின்று கடும் வெயில் அடித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நெல்லை, தென்காசி மாவட்டத்தின் அணை பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

    அதிகபட்சமாக திருச்செந்தூர், குலசேக ரன்பட்டி னத்தில் 7 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதேபோல் சாத்தான்குளம், தூத்துக்குடி, தென்காசி, கடனாநதி, கருப்பாநதி, பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    நெல்லை, டவுன், சந்திப்பு, பாளை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணையின் இன்றைய நீர்மட்டம் 94.55 அடியாக உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100.36 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.86 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×