என் மலர்
உள்ளூர் செய்திகள்

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது?
- தேர்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.
- தேர்வு தொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை :
கொரோனா தொற்றுக்கு பிறகு, நடப்பு கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு எப்போது தொடங்கும்? அதற்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 6 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும் நடக்கும். மேலும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.






