என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மேளதாளங்கள் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

- நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
- பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.
இன்று 6 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன.
நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த வாரம் அந்தந்த பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்கப்பட்டனர்.
தஞ்சை கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் நாதஸ்வரம் ,தவில் உள்ளிட்ட இன்னிசை மேளங்கள் முழங்க பேரணியாக அழைத்து வரப்பட்டு, உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.