என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
    X

    பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது

    • பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்.
    • சிவகாசி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி மீனம்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்ற சோதனையிட்டனர். அப்போது பேராபட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகே உள்ள முட்புதரில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக மீனம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(57), கலைச்செல்வன்(25) ஆகியோரை கைது செய்த சிவகாசி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    மீனம்பட்டி பகுதியில் இருந்த பட்டாசு ஆலை ஒன்றில் தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு 5 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்தோணியம்மாள்(60) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×