என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விபத்துக்கு வழிவகுக்கும் போலீசாரின் வாகன சோதனை
    X

    விபத்துக்கு வழிவகுக்கும் போலீசாரின் வாகன சோதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்துக்கு வழிவகுக்கும் போலீசாரின் வாகன சோதனை நடக்கிறது.
    • சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த சாலையில் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இங்குள்ள கந்தபுரம் தெரு வழியாக அங்குள்ள ராமர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். இதனால் ரெயில்வே பீடர் ரோடு பரபரப்பாக காணப்படு கிறது. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

    மேலும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் அந்த சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டிய போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகன சோதனை நடத்துவது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×