என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது
- வீடு புகுந்து திருடிய 3 பேரை கைது செய்தனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள், ரூ.45,000 மதிப்புள்ள டி.வியை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணி தெருவைச் சேர்ந்தவர் சிவமணி (வயது65). இவர் சம்பவத் தன்று வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடினர். மேலும் அருகில் உள்ள சவுண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ரெஜினா என்பவரது வீட்டிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் குற்ற வாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது.
தனிப்படை போலீ சார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 வீடுகளிலும் நகை, பணம் திருடியது திருவண்ணாமலை மாவட்டம் மதிமங்கலத்தை சேர்ந்த ராமஜெயம்(36), மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன்(42), ஈரோடு மாவட்டம் அக்கரைபாளையத்தை சேர்ந்த அசோக்குமார்(32) என தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள், ரூ.45,000 மதிப்புள்ள டி.வியை பறிமுதல் செய்தனர்.






