என் மலர்
வேலூர்
குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் தாலுகா ஆபீஸ் அருகிலேயே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் 1885-ம் ஆண்டிலிருந்து இயங்கி வந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் தாலுகா அலுவலகம் புதிதாக கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதற்காக அதன் அருகில் இருந்த சார்பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு தற்காலிகமாக தற்போது குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வந்துவிட்டது. இதன் அருகிலேயே பல ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தில் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடியாத்தம் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம். தேவராஜ் முதல்&அமைச்சர், பத்திரபதிவுத்துறை அமைச்சர், பத்திர பதிவுத்துறை தலைவர், கலெக்டர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுமார் 150 ஆண்டுகளாக குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. சார்பதிவாளர் அலுவலகம் வந்து செல்லும் பொது மக்கள், வயதான பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு நகரின் மையப்பகுதியில் இருந்ததால் ஏதுவாக அமைந்திருந்தது.
இந்நிலையில் தனிநபர் ஒருவர் குடியாத்தத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு அருகே உள்ள தனது சொந்த இடத்தில் 21 சென்ட் நிலத்தை தானமாக சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் வந்தால் சுற்றுப்பகுதியில் உள்ள வீட்டுமனைகள் அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்படும் அதனால் அப்பகுதியில் சார்பதிவாளர் அமைக்க இலவசமாக இடத்தை வழங்க இருப்பதாகவும் அதனை ஏற்க கூடாது எனவும் குடியாத்தம் நகர மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாது காப்பில்லாத இடமாகவும் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகத்தை அமைக்கக் கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற கலெக்டர், எஸ்.பி. அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டியில் 19 ரன் வித்தியாசத்தில் எஸ்.பி. அணி வெற்றி பெற்றது.
வேலூர்:
வேலூர் நேதாஜி மைதானத்தில் கலெக்டர், எஸ்.பி, அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இன்று காலை நடந்தது. கலெக்டர் அணிக்கு கேப்டனாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனும் எஸ்பி அணிக்கு எஸ்பி ராஜேஷ் கண்ணனும் கேப்டனாக இருந்தனர்.
15 ஓவர் கொண்ட இந்த போட்டியில் எஸ்.பி அணியில் 11 பேரும், கலெக்டர் அணியில் 11 பேரும் களமிறங்கினர்.
டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய எஸ்.பி அணி 15 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக சப்&இன்ஸ்பெக்டர் முத்தரசு 11 பந்துகளில் 2 சிக்சர் உட்பட 17 ரன்களை விளாசினார்.
எஸ்.பி ராஜேஷ் கண்ணன் 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். கலெக்டர் அணியில் சுபாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கலெக்டர் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே எடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்பி அணி வெற்றி பெற்றது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 9 ரன்களும், சுபாஷ் என்பவர் 28 ரன்களும் எடுத்தனர். எஸ்.பி அணியில் சதீஷ், முத்தரசு, சதீஷ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எஸ்.பி. அணிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். கடந்த 1995&ம் ஆண்டு இதேபோல் கலெக்டர், எஸ்.பி. அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில் எஸ்.பி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் மணி (வயது 31). இவர் ஒரு விதவை பெண்ணை 2- வதாக திருமணம் செய்து கொண்டார்.
அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மணி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால் தாயார் இதனை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
இது குறித்து சிறுமி உறவினர்களிடம் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணியையும் மற்றும் சிறுமியின் தாயாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற குளிர்பானங்கள் அழிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தரமற்ற பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
மாநில உணவு பொருள் பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆகியோரது உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி, கந்தவேல் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் விற்கப்படும் சமையல் பொருட்களில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா?, பொருட்களில் உற்பத்தி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கெட்டுப்போன மற்றும் தரமற்ற சமையல் பொருட்கள் 65 கிலோ, தரமற்ற மற்றும் காலாவதியான குளிர்பானம் 74 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் 5 கடைகளில் உணவு பொருட்கள் ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டது. 3 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 7 கடைகளுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் சுமார் 115 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொழில்பூங்கா காட்பாடி தொகுதியில் அமைய உள்ளது.
வேலூர்:
வேலூருக்கு சுற்றுலாப் பயணிகளும், சிகிச்சைக்காக நோயாளிகளும், கல்விக்காக மாணவர்களும் என வெளி மாவட்ட, வெளி மாநில, வெளி நாடுகளில் இருந்து அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக வேலூர் திகழ்ந்தாலும் இந்த மாவட்ட த்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லாதது மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வேலூர் இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு உள்பட வெளியூர்களுக்கும், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. சொந்த மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாதது பள்ளிக் கல்வியில் வேலூர் மாவட்டம் பின்னடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதனால், மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெருக்கிட தொழிற்பேட்டை, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்பது வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.
இதுதொடர்பாக ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் முக்கிய வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம் எனினும், வேலூர் மாவட்டத்தில் தொழிற் பேட்டை அமைப் பதற்கான ஏற்பாடுகள் நடக்கவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022&23&ம் ஆண்டுக்கான நிதிநிலை படஜெட்டில் வேலூர், கோவை, மதுரை, பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் விதமாக தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்ட மாகவே வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் ஊராட்சியிலுள்ள சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆகியோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனா.¢
இந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. தற்போது தமிழக நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது வேலூர் மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வேலூரில் தொழிற் பேட்டை அமைந்தால் இங்கே தொழில் தொடங்கிட ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன்மூலம், நேரடியாக வும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் பஸ்நிலையத்தில் உள்ள கழிவறைகளில் ரூ.7 கட்டண கொள்ளை நடப்பது குறித்து மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில், கட்டண கழிவறைகள் அமைந்துள்ளது.
இங்கு சிறுநீர் கழிக்க 5 ரூபாய் மற்றும் மற்றவைக்கு 7 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
2 நாட்களுக்கு முன் காலை இங்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரிடம் 5 ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளது தொடர்ந்து. அவர் உள்ளே சென்றதும், துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் மூக்கை மூடியபடி வெளியே வந் தவர் கட்டணம் வாங்கிய பெண்ணிடம், ஏம்மா, உள்ளே நிற்கக்கூட முடிய வில்லை. சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதைக்கேட்ட அங்கிருந்த பெண், நீ குடுக்குற 5 ரூபாய்க்கு சென்ட்டா அடிச்சி விட முடியும்? வேணும்னா, இந்தா வௌக்குமாறு, சுத்தம் பண்ணு என கிண்டலாக கூறியுள்ளார். இதைக்கேட்ட பெண், ஏன் தான் கேட்டோமோ? என வேதனையுடன் சென்று விட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி நலஅலுவலர் மணிவண்ணனிடம், கட்டண கழிவறையில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகி றது? என கேட்டபோது, எதுவாக இருந்தாலும் 1 ரூபாய்தான் என்றார்.
கட்டண கழிவறைகளை குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் ஏலத்தில் எடுக்கின்றனர்.
அவர்கள் வெளிஆட்களை உள்ளே விடாமல் ஏலம் எடுப்பதால், அவர்கள் வைத்தது தான் சட்டமாகும்.
அதிலும் விதிவிலக்காக பழைய பஸ் நிலையத்தில் உள்ள மற்றொரு கட்டணக் கழிவறை போட்டி காரணமாக 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாநகர பகுதியில் உள்ள கழிவறைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் போடிபேட்டையில் குடிநீர் கிணறுகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் போடிபேட்டை அருகே கவுண்டன்யமகாநதி ஆற்றில் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் 1959-ம் ஆண்டு குடிநீர் தேவைக்காக 2 கிணறுகளை அமைத்து தந்தார்.
கடந்த பல வருடங்களாக இந்த கிணறுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்த 2 கிணறுகள் மூலம் தினமும் குறைந்தபட்சம் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு போடி பேட்டை புவனேஸ்வரி பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தரப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது அதனால் இந்த கிணறுகள் கண்டுக்காமல் விடப்பட்டது.
இதணை தொடர்ந்து அந்த கிணறுகள் சீரமைக்கப்பட்டு நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நகர்மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன், நவீன்சங்கர், நகராட்சி என்ஜினீயர் சிசில்தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் எம்.முத்து, எஸ். பார்த்திபன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு:
செய்யாறு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த மாணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
டாக்டர் பரிசோதனை செய்தபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அவரது தாயார் செய்யார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முருகனை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் செயின் பறிப்பை தடுக்க இளம்பெண் கொள்ளையனுடன் போராடியதில் குழந்தை இடுப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 28). பாரதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று காலை குழந்தைக்கு உணவு வழங்குவதற்காக மாடிக்கு தூக்கிச் சென்றார். உணவு வழங்கி விட்டு மீண்டும் மாடிப்படி வழியாக கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது மாடிப்படியில் எதிரே வந்த மர்மநபர் திடீரென பாரதியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார்.
இதனால் திடுக்கிட்டு அதிர்ச்சியடைந்த பாரதி செயினை கெட்டியாக பிடித்துகொண்டு போராடினார்.
அப்போது பாரதி இடுப்பில் வைத்திருந்த குழந்தை கை தவறி 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது.
இதில் படுகாயமடைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக்கண்ட செயின் பறிப்பு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
கீழே விழுந்து இறந்த குழந்தையை பார்த்து பாரதி கதறி அழுது துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் செயின் பறிப்பு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 28). பாரதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று காலை குழந்தைக்கு உணவு வழங்குவதற்காக மாடிக்கு தூக்கிச் சென்றார். உணவு வழங்கி விட்டு மீண்டும் மாடிப்படி வழியாக கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது மாடிப்படியில் எதிரே வந்த மர்மநபர் திடீரென பாரதியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார்.
இதனால் திடுக்கிட்டு அதிர்ச்சியடைந்த பாரதி செயினை கெட்டியாக பிடித்துகொண்டு போராடினார்.
அப்போது பாரதி இடுப்பில் வைத்திருந்த குழந்தை கை தவறி 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது.
இதில் படுகாயமடைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக்கண்ட செயின் பறிப்பு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
கீழே விழுந்து இறந்த குழந்தையை பார்த்து பாரதி கதறி அழுது துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் செயின் பறிப்பு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடியில் ரெயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
ஆந்திராவில் இருந்து வரும் ரெயில்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருகின்றனர்.இதனை தடுக்க காட்பாடியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அதில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது ரெயில் பயணிகள் இருக்கைக்கு அடியில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அருகே வங்கி கணக்கில் பணம் எடுத்ததாக போலி மெசேஜ் அனுப்பி ரூ.74 ஆயிரம் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் அடுத்த கீழ் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 14-ந்தேதி ரூ.65 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக செல்போன் எண்ணிற்கு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதாகர் உடனடியாக இணையதளத்தில் இருந்த வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசிய மர்ம நபர் போலியான ஆன்லைன் முகவரியை கொடுத்து அதில் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யுமாறு கூறினார்.
அதன்படி வங்கி விவரங்களை பதிவு செய்தார். ஒரு சில நொடிகளில் சுதாகரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.49,999 மற்றும் ரூ.24,999 என 2 தடவையாக ரூ.74,998 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வேலூரில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் சென்று இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இந்த வாகனத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பஸ்களில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார். மேலும் பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அங்குள்ள பிரபல ஓட்டல் முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் பழைய பஸ் நிலையத்திற்குள் செல்லும் வழியில் அதிக அளவு நெரிசல் ஏற்பட்டது.
இதனை கண்காணித்த கலெக்டர் பிரபல ஓட்டல் முன்பு இது போன்ற வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனால் ஓட்டல் முன்பு இருந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கலெக்டர் உத்தரவிட்டது போல தனியார் ஓட்டல் முன்பு எப்போதும் வாகனங்கள் நிறுத்த முடியாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






