என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
காட்பாடியில் ரெயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்
காட்பாடியில் ரெயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
ஆந்திராவில் இருந்து வரும் ரெயில்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருகின்றனர்.இதனை தடுக்க காட்பாடியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அதில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது ரெயில் பயணிகள் இருக்கைக்கு அடியில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






