என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முழுமையாக செயல்ப டுத்த மாவட்ட ஊராட்சி நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்ட ஊராட்சி குழு சார்பில் உணவு மற்றும் வேளாண்மை குழுவின் முதல் நிலைக்குழு கூட்டம் நடந்தது. கூட் டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். துணைத்தலை வர் கிருஷ்ணவேனி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் சரண்யா தேவி வரவேற்று பேசினார்.
வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந் திர பிரதாப் தீட்சித் கலந்து கொண்டு பேசினார் . அதில் வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட ஊராட்சியின் உணவு மற்றும் வேளாண்மை குழுவிற்கு விவரிக்கப்பட் டது.
வேளாண்பொறியி யல் துறை சார்ந்த வளர்ச் சித்திட்டங்களையும் , மாவட்ட வழங்கல் துறை சார்ந்த மாவட்ட ஊராட் சியின் உணவு மற்றும் வேளாண்மை குழுவிற்கு விவரிக்கப்பட்டது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அனைத்து மாவட்ட கவுன்சிலர் களும் தங்களது பகு திகளில் முழுமையாக செயல்படுத்தப்படுவது என்று முடிவு செய்துள்ளனர்.
மேலும் கிராமங்க ளில் நீர் ஆதாரங்களை உருவாக்குதல், சாகுபடிப் பரப்பிபை உயர்த்துதல், விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளை மேற்கொள்ளுதல், தங்களது பகுதிகளில் ஒன்றிய, மாநில அரசு திட் டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள், பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தேவைகள் என்ன? என்பது குறித்து அறிக் கையாக பெறப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவர்த்தி செய்யப் பட உள்ளது.
மேலும் அடிப்படை தேவைகள், ஒவ்வொரு துறைக்கும் அதன் சார்ந்த கோரிக் கைகள் கொண்டு சென்று பொதுமக்களுக்கு தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட ஊராட்சி குழு வில் கல்வி, வேளாண், குடிநீர், மின்சாரம் போன்ற 7 நிலைக்குழுகள் அமைக்கப் பட்டுள்ளது. 3 மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு நிலைக்குழு கூட்டம் நடத் தப்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் அருகே 4 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனவி சிந்துபைரவி (வயது27) 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சிந்துபைரவி நேற்று மதியம் வீட்டில் சேலையால் போடப்பட்ட தூக்கில் தொங்கினார்.
இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிந்துபைரவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிந்துபைரவி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
சிந்து பைரவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது தாயார் தேன்மொழி புகார் அளித்தார்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கணபதி,சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அருகே பைக் விபத்தில் தோழியுடன் வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
பெங்களூரு நரசிம்ம ரெட்டி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 26) இவர் நேற்று அவரது தோழி முல்லையரசி (25) என்பவருடன் பைக்கில் சென்னை நோக்கி வந்தனர்.
வேலூர் அருகே உள்ள மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலை தடுப்பில் எதிர்பாராதவிதமாக பைக் மோதியது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். விரிஞ்சிபுரம் போலீசார் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே ஜெயபிரகாஷ் இறந்தார். முல்லையரசிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேலூரில் இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நள்ளிரவில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.
வேலூர் மாநகரில் ஆட்டோ டிரைவர்கள் போர்வையில் இருக்கும் சில சமூக விரோதிகள் அவ்வப் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை போலீசார் கைது செய்கின்றனர்.
இதில், இரவு நேரங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள சம்பவம் 2நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.
காட்பாடி பகுதியில் உள்ள பிரபல தியேட்டரில் நள்ளிரவில் படம் பார்த்துவிட்டு ஷேர் ஆட்டோவில் ஆண் நண்பருடன் வந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை 4 பேர் கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் இதுவரை புகார் தெரிவிக்காத நிலையில், சத்துவாச்சாரி போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் வேறு ஒரு அடிதடி வழக்கில் சிக்கிய நிலையில், போலீஸ் விசாரணையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இளம் பெண்ணின் ஏடிஎம் கார்டை பயன் படுத்தி சத்துவாச்சாரியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளதால் அதன் வங்கி விவரங்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சேகரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் படம் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையால் நள்ளிரவில் ஆட்டோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப் பாடுகளையும் அடையாள அட்டைகளை வழங்கி முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
‘‘வேலூர் மாகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் மட்டும் 300&-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, காட்பாடி பகுதியில் இருந்து அதிகளவில் இயக்கப் படுகின்றன.
காட்பாடி ரெயில் நிலையம், அங்குள்ள முக்கிய தியேட்டர்கள் இருப்பதால் எந்த நேரமும் ஆட்டோக்கள் வந்து சென்று கொண்டே இருக்கிறது. ஒரு சிலரின் தவறான செயல்களால் மொத்த ஆட்டோ டிரைவர்களின் பெயர்களும் பாதிக்கிறது.
எனவே, இரவு நேர ஆட்டோக்களுக்கு தனி அடையாள அட்டை, ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை வழங்கலாம்.
இப்படி செய்யும்போது இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்’’ என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயாவிடம் கேட்டதற்கு, ‘‘இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார்.
குடியாத்தத்தில் வீட்டின் அருகே பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் ராஜகணபதி நகர் அருகே உள்ள திருமண மண்டபம் பின்புறம் நேற்று மாலையில் ஒரு வீட்டின் அருகே சத்தம் கேட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.
பிடிபட்ட நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூரில் தொழிலதிபர் வீடு புகுந்து 25 பவுன் நகை, பணம் கொள்ளையடித்த வாலிபரை கேமராவின் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.
வேலூர்:
வேலூர் சலவன்பேட்டை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பூபாலன். டயர் டீலர் நிறுவனம் நடத்திவருகிறார்.
நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் இவரது வீட்டில் வாலிபர் ஒருவர் புகுந்தார். அவர் வீட்டில் உள்ள அறைகளை திறந்து அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.
காலையில் கண் விழித்த பூபாலன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பூபாலன் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அதே பகுதியை சேர்ந்த ராகுல் ராபர்ட் (வயது 22). என்பவர் பூபாலன் வீட்டில் இருந்து கொள்ளையடித்து விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதனை வைத்து நேற்று அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த ராகுல் ராபர்ட்டை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தங்க நகைகள் மற்றும் பணம் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் ஆயுதப் படை போலீசார் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதனால் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங் களில் போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டது.இதன் காரணமாக தற்போது வேலூர் ஆயுதப் படையில் பணியாற்றி வரும் கிரேட் 1 போலீசார் மற்றும் அவில்தார்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் ஆயுதப் படையில் பணியாற்றி வரும் போலீசார் தங்களது குழந்தை குடும்பத்தினரை பிரிந்து தினமும் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
இதனால் பெண் போலீசார் மிகுந்த மனவேதனை அடைந்து உள்ளனர்.
கட்டாயத்தின் பேரில் பெண் போலீசாரை திருப்பத்தூருக்கு பணி இடமாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேலூர் சாய்நாதபுரத்தில் பல ஆயிரம் பேர் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
வேலூர்:
வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் சாய்நாதபுரம் சாஸ்திரிநகர், ஜெசி நகர், கணபதி நகர், புதுமை நகர், ஆர்.வி. நகர், கமலா காடன். கண்ணதாசன் நகர ஆசிரியர் நகர் செட்டியார் தோப்பு, அசோகன் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், சபாபதி நகர், கன்னிகாபுரம், முருகன் நகர் பகுதியில் சுமார் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள சுடுகாட்டு பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம். இதில் தனியார் கல்லூரி நிர்வாகம் சாலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த சாலை பகுதியில் நேற்று சாமி சிலை ஒன்று வைத்தோம். அதற்கும் கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பல ஆயிரம் பேர் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் காட்பாடியில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது.
கடந்த 15&ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்றது. ஏராளமான ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்று சென்றனர்.
16&ந் தேதி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் குறித்த கவுன்சிலிங் தொடங்கியது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிக அளவில் வட மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாகவும் சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய வேண்டியுள்ளது.
இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஆசிரியர்கள் சுமார் 2000 முதல் 2500 பேர் வரை தமிழகம் முழுவதும் விண்ணப்பித்திருந்தனர்.
இதனால் இந்த இடமாறுதல் கவுன்சிலிங் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை கவுன்சிலிங் நடைபெற்றது.
இன்று 4&வது நாளாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கவுன்சிலிங் நடைபெற்றது. 4 நாட்களாக ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்று வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:&
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஆசிரியர்கள் 2000&க்கும் மேற்பட்டோர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் தாமதமாக கவுன்சிலிங் நடந்து வருகிறது. நாளை இந்த கவுன்சிலிங் முடிந்து விடும் என்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கும் இலவச பஸ் வசதி கேட்டு மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்து தேசிய கட்சியினர் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை போன்று வறுமை கேட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை ஆண்களுக்கும் பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்துடன் கூடிய இலவச பஸ் பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் பெண்களுக்கு தமிழகம் முழுவதும் செல்வதற்கு இலவச பஸ் பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
இதில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடு இன்றி உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
வேலூரில் பயங்கர கொசு தொல்லையால் மருந்து அடிக்க மாநகராட்சியிடம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாநகரப் பகுதியில் தற்போது பகலில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை நேரத்தில் அனல் காற்று வீசத் தொடங்குகி உள்ளது. இதனால் பொதுமக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர்.
இயற்கை சூழ்நிலை ஒங புறம் இருக்க கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சி பகுதியில் தோட்டப்பாளையம் சைதாப்பேட்டை சத்துவாச்சாரி பகுதியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.
நள்ளிரவு வரை அனல் காற்று வீசுவதால் வீடுகளில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கொசு தொல்லை காரணமாக கொசுக்கடியால் தினந்தோறும் அல்லல்படுகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பகலிலும் கொசுக்கள் கடிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிற்க முடியாத அளவிற்கு கொசு தொல்லை உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி வீதிவீதியாக கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் நள்ளிரவு நேரங்களில் ஆட்டோவில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடியில் திருவலம் ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர்.
படம் முடிந்து இரவு 12.30 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.
இது ஷேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார். இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர்.
காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அங்கே சாலையை மறைத்து வேலை ஏதோ நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர்.
சர்வீஸ் சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ சத்யா ஷோரூம் முன்பாக உள்ள சாலை வழியாக பாலாற்றின் கரைக்கு சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதுவரை அமைதியாக இருந்த கும்பல் கத்திமுனையில் மிரட்டத் தொடங்கினர். பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்தனர். மேலும் ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை.
இந்த நிலையில் சத்துவாச்சாரியில் நேற்று ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டனர். அதில் சிலர் டிப்டாப் உடை அணிந்திருந்தனர். அவர்களை சத்துவாச்சாரி போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த டிப்டாப் ஆடை குறித்து விசாரித்தனர்.
அதில்தான் அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேரை ஆட்டோவில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும் தொடர்ந்து அவர்களின் செல்போன் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்தது தெரியவந்தது. அந்த பணத்தில் டிப்டாப் உடையை வாங்கியும் மற்றும் உல்லாசமாக செலவு செய்துள்ளனர்.
இந்த துணிகர செயலில் ஈடுபட்ட கும்பல் குறித்து துப்பு துலங்கி உள்ளது. இதில் 2 பேரை சத்துவாச்சாரி போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ரெயில்கள் மூலம் வட மாநிலங்களில் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக நள்ளிரவு நேரங்களிலும் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் வருகின்றனர்.
அவர்களை ஆட்டோ டிரைவர்கள் பாதுகாப்பாக ஆஸ்பத்திரி முன்பு இறக்கி விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் ஷேர் ஆட்டோ எனக் கூறி டாக்டர்களை கடத்தி செல்போன் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இதனால் ஆட்டோ பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நள்ளிரவு நேரங்களில் ஆட்டோவில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் காட்பாடியில் திருவலம் ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர்.
படம் முடிந்து இரவு 12.30 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.
இது ஷேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார். இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர்.
காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அங்கே சாலையை மறைத்து வேலை ஏதோ நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர்.
சர்வீஸ் சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ சத்யா ஷோரூம் முன்பாக உள்ள சாலை வழியாக பாலாற்றின் கரைக்கு சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதுவரை அமைதியாக இருந்த கும்பல் கத்திமுனையில் மிரட்டத் தொடங்கினர். பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்தனர். மேலும் ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை.
இந்த நிலையில் சத்துவாச்சாரியில் நேற்று ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டனர். அதில் சிலர் டிப்டாப் உடை அணிந்திருந்தனர். அவர்களை சத்துவாச்சாரி போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த டிப்டாப் ஆடை குறித்து விசாரித்தனர்.
அதில்தான் அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேரை ஆட்டோவில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும் தொடர்ந்து அவர்களின் செல்போன் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்தது தெரியவந்தது. அந்த பணத்தில் டிப்டாப் உடையை வாங்கியும் மற்றும் உல்லாசமாக செலவு செய்துள்ளனர்.
இந்த துணிகர செயலில் ஈடுபட்ட கும்பல் குறித்து துப்பு துலங்கி உள்ளது. இதில் 2 பேரை சத்துவாச்சாரி போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ரெயில்கள் மூலம் வட மாநிலங்களில் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக நள்ளிரவு நேரங்களிலும் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் வருகின்றனர்.
அவர்களை ஆட்டோ டிரைவர்கள் பாதுகாப்பாக ஆஸ்பத்திரி முன்பு இறக்கி விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் ஷேர் ஆட்டோ எனக் கூறி டாக்டர்களை கடத்தி செல்போன் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இதனால் ஆட்டோ பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நள்ளிரவு நேரங்களில் ஆட்டோவில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






