என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் பயங்கர கொசு தொல்லை- மருந்து அடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூரில் பயங்கர கொசு தொல்லையால் மருந்து அடிக்க மாநகராட்சியிடம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாநகரப் பகுதியில் தற்போது பகலில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை நேரத்தில் அனல் காற்று வீசத் தொடங்குகி உள்ளது. இதனால் பொதுமக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர்.
இயற்கை சூழ்நிலை ஒங புறம் இருக்க கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சி பகுதியில் தோட்டப்பாளையம் சைதாப்பேட்டை சத்துவாச்சாரி பகுதியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.
நள்ளிரவு வரை அனல் காற்று வீசுவதால் வீடுகளில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கொசு தொல்லை காரணமாக கொசுக்கடியால் தினந்தோறும் அல்லல்படுகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பகலிலும் கொசுக்கள் கடிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிற்க முடியாத அளவிற்கு கொசு தொல்லை உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி வீதிவீதியாக கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story






