என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  «è£Š¹Šðì‹
  X
  «è£Š¹Šðì‹

  குடியாத்தம் அருகே 4 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியாத்தம் அருகே 4 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
  குடியாத்தம்:

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் பால் வியாபாரம் செய்து வருகிறார். 

  இவரது மனவி சிந்துபைரவி (வயது27)  7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில் சிந்துபைரவி நேற்று மதியம் வீட்டில் சேலையால் போடப்பட்ட தூக்கில் தொங்கினார்.

  இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிந்துபைரவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிந்துபைரவி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

  சிந்து பைரவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது தாயார் தேன்மொழி புகார் அளித்தார். 

  புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கணபதி,சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×