என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் பஸ்நிலையத்தில் உள்ள கழிவறைகளில் ரூ.7 கட்டண கொள்ளை- மாநகராட்சி எச்சரிக்கை
வேலூர் பஸ்நிலையத்தில் உள்ள கழிவறைகளில் ரூ.7 கட்டண கொள்ளை நடப்பது குறித்து மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில், கட்டண கழிவறைகள் அமைந்துள்ளது.
இங்கு சிறுநீர் கழிக்க 5 ரூபாய் மற்றும் மற்றவைக்கு 7 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
2 நாட்களுக்கு முன் காலை இங்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரிடம் 5 ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளது தொடர்ந்து. அவர் உள்ளே சென்றதும், துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் மூக்கை மூடியபடி வெளியே வந் தவர் கட்டணம் வாங்கிய பெண்ணிடம், ஏம்மா, உள்ளே நிற்கக்கூட முடிய வில்லை. சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதைக்கேட்ட அங்கிருந்த பெண், நீ குடுக்குற 5 ரூபாய்க்கு சென்ட்டா அடிச்சி விட முடியும்? வேணும்னா, இந்தா வௌக்குமாறு, சுத்தம் பண்ணு என கிண்டலாக கூறியுள்ளார். இதைக்கேட்ட பெண், ஏன் தான் கேட்டோமோ? என வேதனையுடன் சென்று விட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி நலஅலுவலர் மணிவண்ணனிடம், கட்டண கழிவறையில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகி றது? என கேட்டபோது, எதுவாக இருந்தாலும் 1 ரூபாய்தான் என்றார்.
கட்டண கழிவறைகளை குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் ஏலத்தில் எடுக்கின்றனர்.
அவர்கள் வெளிஆட்களை உள்ளே விடாமல் ஏலம் எடுப்பதால், அவர்கள் வைத்தது தான் சட்டமாகும்.
அதிலும் விதிவிலக்காக பழைய பஸ் நிலையத்தில் உள்ள மற்றொரு கட்டணக் கழிவறை போட்டி காரணமாக 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாநகர பகுதியில் உள்ள கழிவறைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






