என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரோவில் சர்வதேச நகரத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்.
புத்தாண்டை முன்னிட்டு ஆரோவில் சர்வதேச நகரத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு
- ஆரோவில் அருகில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. அங்கும் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன.
- சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில், திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில், கல்மர பூங்கா, மொரட்டாண்டி காளி கோவில் போன்றவைகளும் சர்வதேச நகரமான ஆரோவில்லும் உள்ளது. இப்பகுதி அருகில் புதுச்சேரி மாநிலமும் உள்ளது. அங்கும் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் வெளிநாடுகள், வெளிமாநிலத்தவர் இவைகளை காண இப்பகுதிகளுக்கு வருவது வழக்கம். கடந்த சில வருடங்களாக கொரோனா பாதிப்பினால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. இதனை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வானூர் அடுத்த கோட்டக்குப்பம் பகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கு குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஆரோவில் மாத்ரி மந்திர் குளோப்பினை காண ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர். இதனால் கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. மேலும், தந்திராய ன்குப்பம், நடுக்குப்பம், பொம்மையார்பாளையும் கடற்கரைகளுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இதை யடுத்து கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டு மித்ரன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






