என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குற்றாலம் அருவிகளில் குதூகலமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
ByMaalaimalar27 July 2024 1:35 PM IST
- சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது.
- சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி:
தமிழக சுற்றுலா தலங்களில் முக்கியமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும்.
அதன்படி தற்போது குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது. மேலும் குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்வதால் தண்ணீர் விழுவதால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் குற்றாலத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வருவதால் சேதமடைந்து காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X