என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலீடு செய்யும் பணத்தில் லாபம் தருவதாககூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி
- காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாதந்தோறும் இரண்டும் முறை 15 சதவீத வட்டியும் கிடைக்கும் என்று கூறினார்கள்.
கோவை,
கோவை பீளமேட்டை அடுத்த நேரு நகரை சேர்ந்தவர் கணேசன். (வயது 51). இவர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2019-ம் ஆண்டு காட்டூர் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்றிருந்தேன். அப்போது ராஜா மற்றும் செல்வராஜ் என்பவர்கள் வந்து என்னிடம் பேசி அறிமுகமானார்கள். அவர்கள் என்னிடம் தனியார் டிரேடிங் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால் 2 சதவீதம் வட்டியும், முதலீடு செய்த பணத்தின் மதிப்பில் இருந்து மாதந்தோறும் இரண்டும் முறை 15 சதவீத வட்டியும் கிடைக்கும் என்று கூறினார்கள்.
இதனை உண்மையென நினைத்து நான் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவர்கள் அலுவலகத்திற்கு சென்று முதலில் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்தேன். சில நாட்கள் கழித்து மீண்டும் ரூ.2 லட்சம் பணத்தை கொடுத்தேன். பின்னர் அதற்கான வட்டி பணத்தை அவர்களிடம் கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தனர்.
இதனால் நான் கொடுத்த ரூ.3 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அந்த பணத்தையும் தராமல் நாட்கள் கடத்தி வந்தனர்.அப்போது தான் அவர்கள் என்னை ஏமாற்றி வருவது தெரியவந்தது. எனவே முதலீடு செய்த பணத்தில் அதிக லாபம் தருவதாக கூறி என்னிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த டிரேடிங் நிறுவனத்தின் மேலாளர் பாலச்சந்திரன், ஊழியர்கள் ராஜா மற்றும் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து டிரேடிங் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீதும் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.