என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 140 காமாட்சியம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் சாலையில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் குமரேசன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மூட்டையுடன் பைக்கில் வந்த கீழ்பென்னாத்தூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜா (வயது47) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    மூட்டையில் 140 காமாட்சி அம்மன் பித்தளை விளக்குகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆரணியில் பகுதியில் உள்ள பாத்திர கடைகளுக்கு காமாட்சி அம்மன் விளக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

    காமாட்சி அம்மன் விளக்குகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ராஜாவிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காமாட்சி அம்மன் விளக்குகளை பறிமுதல் செய்தனர். ஆரணி நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்செல்வியிடம் பறிமுதல் செய்யப்பட்ட விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். 
    கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி மில் தலைமையாசிரியராக பணியாற்றும் அண்ணாமலை என்பவருக்கும், அதே பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியராக பணியாற்றி வரும் செழியன் என்பவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    அவர்கள் சிறுசிறு பிரச்சினைகளை பெரியதாக்கி  வாக்குவாதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்தநிலையில் நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    அப்போது பள்ளியில் வைத்து இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதை யாரோ மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.  மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றிய தகவல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனத்துக்கும்  சென்றது. இதனால் அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை இன்று அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் கூறுகையில்:&

    ஆசிரியர்கள் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்று கிடைத்துவிடும். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    திருவண்ணாமலை அருகே முயல் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனக்குழுவினர் 3 பேர் திப்பக்காடு வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது  நள்ளிரவு 12மணி அளவில் திப்பக்காடு காப்புகாடு பகுதியில் 5மர்மநபர்கள் டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களுடன் முயல்களை வேட்டையாடி கொண்டு இருந்தனர். .அவர்களை வனக்குழுவினர் விரட்டி சென்று 3பேரை பிடித்தனர். 

    2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கத்தரிவாடியை சேர்ந்த மேஸ்திரி கருணாகரன்(வயது 28) மங்கலம் புதூரைசேர்ந்த திருமலை (வயது 29) டிரைவர், வள்ளிவாகை கோபி குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 44) டிரைவர் என்பது தெரியவந்தது.

    அவர்களை வனக்குழுவினர் கைது செய்து வேட்டையாட பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களுடன் வேட்டையாட வந்து தப்பி சென்று 2பேரை  தேடி வருகின்றனர். 
    படவேடு கோவில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். 

    விரைவில் வருகிற 6&ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள இக்கோவிலில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

    கோவில் எதிரே உள்ள சாலையில் பாதுகாப்பு கருதி பேரிகார்டுகள் வைக்கப் பட்டுள்ளது.மாடவீதியில் பக்தர்கள் அனுமதியில்லை. இதனால் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. 

    மேலும் கோவில் செல்லும் சாலையில் ஏராளமான நடைபாதை கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். படவேடு கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் உள்ளது. 

    ஆனால் வாகனங்களை இங்கு நிறுத்தாமல் எவ்வித கட்டுப்பாடுமின்றி கோவிலுக்கு அருகே சாலையோரம் நிறுத்திவிடுகின்றனர். 

    கோவில் செல்லும் சாலையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பணப்பயன்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாரத்தில் ஆசிரியர் மோகன் மற்றும் வந்தவாசி பகுதியில் ஆசிரியர் சத்தியபாமா ஆகியோர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு ஆணை வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது. 

    இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

    இந்த போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ் கூறும்போது, ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட 2ஆசிரியர்களுக்கு‌பதவி உயர்வு வழங்க வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

    இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
    சேத்துப்பட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் திடீர் தர்ணாவால் நெல் மூட்டைகளை எடைபோட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்னர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டைவந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் தமிழ்நாட்டில் 2-வது இடமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடம் வகித்து வருகிறது. 

    இங்கு சேத்துப்பட்டு சுற்றி அண்டை மாவட்டங்கள் பக்கத்து கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிலா பயிர் வகைகளை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த திங்கட்கிழமை அன்று விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை எடை போட்ப்பட்டு நிறுத்தப்பட்டது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சுமைதூக்கும்கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோணிப்பை மாற்றி லோடு ஏற்றும் தொழிலாளர்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட சுமை தூக்கும்கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் செவ்வாய்க்கிழமை புதன்கிழமை மற்றும் நேற்று வியாழக்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்கியது.     
     
    இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. 

    இதுகுறித்து கூலி தொழிலாளர்களிடம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தினேஷ் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். 

    ஆனால் எந்த ஒரு சுமூக முடிவும் எட்டப்படவில்லை இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடசெயலாளர் தர்மராஜ் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்தார்.

    பின்னர் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நெல் மணிலா வியாபாரிகள் சங்க தலைவர் தண்டபாணிமற்றும் வியாபாரிகள் அனைத்து வணிகர் சங்க செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி பா.ம.க.வை சேர்ந்த அனாதிமங்கலம் பழனி மற்றும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூலி தொழிலாளி சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இதில் வழக்கமாக பை மாற்ற கூலி ரூ.8 ஆகவும் லாரியில் லோடு ஏற்ற ரூ.8 ஆகவும் லாரி லோடு ஏற்ற மாமுல் ரூ.3 ஆகவும் இருந்து வந்தது.

    பேச்சுவார்த்தை நடத்தியதில் பை மாற்ற ரூ.9 லாரி லோடு ஏற்ற ரூ.9 லாரியில் லோடு மாமுல் 3. ரூபாய் 50 காசு உயர்த்தி வழங்க சுமைதூக்கும் கூலி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்துஒழுங்குமுறை விற்பனைக்கூட நெல் மணிலா வியாபாரிகள் முன்வந்தனர். 

    பின்னர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது கூலி உயர்வும் கிடைத்ததால் கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக வேலைக்கு திரும்பி சென்றனர். 

    பேச்சுவார்த்தைக்கு முன்பு சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நுழைவாயிலில் கூலித் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்ததால் சிறிது நேரம் அந்த பகுதி பரபரப்பு காணப்பட்டது.
    உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதையடுத்து ஆரணி நகராட்சி அலுவலகத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ஆரணி:

    நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்.19-ந்தேதி நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 28 ஆயிரத்து 324 பெண் வாக்காளர் 25 ஆயிரத்து 740 ஆண் வாக்களர்களும் 3&ம் பாலித்தனர் 7 பேரும் என மொத்தம் 54 ஆயிரத்து 71 பேர் வாக்களிக்க உள்ளனர். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 

    இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியதால் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர். 

    இன்று முதல் தேர்தல் திருவிழா தொடங்கியதால் கட்சியினர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
    போளூர் பேரூராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலையோட்டி தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போளூர் பேரூராட்சியில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. போளூர் பேரூராட்சியின் தேர்தல் அதிகாரியாக செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    போளூர் பேரூராட்சியில் மொத்த வாக்காளர்கள் மொத்தம் 21984 பேர் அதில் ஆண் வாக்காள 10365 பேர், இதில் பெண் வாக்காளர்கள் 11620, மூன்றாம் பாலினம் வாக்காளர் ஒருவர் ஆகும்.

    போளூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டு-8 பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டு-9 இதில் 1 வார்டு தனி வார்டு (ரிசர்வேஷன்) அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 18 வார்டுகளில் அதிகளவு வாக்காளர் கொண்ட வார்டு18&வது குறைந்த வாக்காளர்களை கொண்ட வார்டு 13-வது வார்டு ஆகும்.

    மொத்த வாக்குச்சாவடி மையங்கள் 30 ஆகும் இதில் ஆண்களுக்கு என 12 வாக்கு சாவடி மையங்கள், பெண்களுக்கு 12 வாக்குச்சாவடி மையங்கள், பொதுவான வாக்குச்சாவடி மையங்கள் 6எனவும் மொத்தம் 30 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்தகவலை போளூர் பேரூராட்சியின் தேர்தல் அதிகாரியும், போளூர் பேரூராட்சி செயலாளருமான முகமது ரிஸ்வான் தெரிவித்தார்.
    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் ஓசூரில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவி விடுமுறைக்காக புதுக்கோட்டை கிராமத்திற்கு வந்து செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஜீவானந்தம் (வயது21) என்பவர் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். சிறுமியை பலமுறை காதல் செய்வதாக கூறி ஜீவானந்தம் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஜீவானந்தத்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாணவியின் தாய் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியை காதல் செய்வதாக கூறி தொந்தரவு செய்த டிரைவர் ஜீவானந்தத்தை போக்சோ தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பிரச்சினையில் சுமுக முடிவு ஏற்படாததால் தொடர்ந்து அங்கு பதட்டமாக காணப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது. இதில் ஒருதரப்பினர் தாக்கப்பட்டு வீடுகள் சேதம் அடைந்தது. 

    தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் டில்லியிலிருந்து  பார்வையிட வந்தார். அவரை வீரலூர் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து டி.ஜி.பி. ரவி, ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், ஐ.ஜி.க்கள் சந்தோஷ்குமார், செந்தாமரைக்கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, கலெக்டர் முருகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் .பின்னர் அங்கேயே சுமார் 15 நிமிடங்கள் சம்பவம் குறித்து பேசினர். 

    இதன் பின்னர் பாதிக்கப்பட்ட தெருவில் ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டனர். இதன் பின்னர் மேல் சோழங்குப்பம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹால்டர் பேசும்போது கூறியதாவது:-

    வீரளூர் கிராமத்தில் சுடுகாடு பாதை பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கலவரம் நடந்து இருப்பது மிகவும் வேதனை அளக்கிறது. இன்னும் 24 மணி நேரத்தில் சாதி மத பேதமில்லாமல் அனைவரும் ஒரு வழியில் செல்லுமாறு சுடுகாட்டுப் பாதையை தேர்வு செய்தாக வேண்டும். மேலும் சாதி மதத்தை தூண்டி விடுபவர்கள் யார் ? யார் ? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் கலவரத்தை உண்டாக்கியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ்  பெற்று கொலை முயற்சி வழக்காக மாற்ற வேண்டும் .அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் 41 பேருக்கு மட்டும் அரசின் நிதியை வழங்கியது தவறு. இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் அறிந்து அனைவருக்கும் அரசின் நிதி வழங்க வேண்டும்.

    மேலும் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடக்கூடாது. அனைவருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் .
    இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வருகையையொட்டி கலச பாக்கத்தில் இருந்து வீரளூர் கிராமம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதன் பின்னரும் சுடுகாடு  பாதை பிரச்சினையில் சுமூக முடிவு ஏற்படாததால் வீரளூர் கிராமத்தில் தொடர்ந்து பதட்டமான நிலைமை நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.  வீரளூர் கிராமத்தில் மீண்டும் எந்த பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கீழ்வல்லம் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம் கிராமத்தில் நேற்று 50-ம் ஆண்டாக காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

    ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வீதியில் வேகமாக ஓடவிடப்பட்டது. 

    இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற லத்தேரி பாபு என்பவரின் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.75,001, 2-ம் இடம் பெற்ற கிருஷ்ணகிரி காளைக்கு ரூ.60,001-ம், 3-ம் இடம் பெற்ற விருதம்பட்டு வீரமுத்தரையர் காளைக்கு ரூ.50,001 உள்பட 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    பரிசுகளை ஊராட்சி தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள், மாவட்ட கவுன்சிலர் தேவி மற்றும் விழாக்குழுவினர் வழங்கினர்.

    காளைவிடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த வசந்தபுரம் மணிகண்டன், கீழ்வல்லம் ஜெயசீலன், கம்மசமுத்திரம் கவியரசன் உள்பட 20& க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    விழாவில் வேலூர் கோட்டாச்சியர் பிரியதர்ஷினி, தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் வருவாய்த்துறையினர் மேற்பார்வையில், வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நிலவழகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    செய்யாறு தலைமையில் புதிய மாவட்டம் அறிவிக்ககோரி பைக் பேரணி நடத்தினர்.
    செய்யாறு:

    செய்யாறை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் கே.கே.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க செய்யாறு எம்.எல்.ஏ. ஓ.ஜோதிடம் மனு அளிக்க செய்யாறில் பைக் பேரணி நடைபெற்றது. 

    செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் நடராசன் தலைமையில் செய்யாறு வழக்கறிஞர்கள் சங்கம், செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கம் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 பேர் பைக்கில் பேரணியாக ஊர்வலமாக சென்று வேதபுரீஸ்வரர் கோவிலில் தொடங்கி காந்தி சாலை, ஆற்காடு சாலை வழியாக முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து செய்யாறு சட்ட மன்ற அலுவலகத்தில் எம்.எல்.ஏ. ஓ.ஜோதிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

    மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ. விரைவில் முதல் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
    ×