என் மலர்
திருவண்ணாமலை
நாயுடு மங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி கலசத்தை ஒருவாரத்தில் வைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலம் பஸ்நிலையம் பகுதியில் கடந்த 1989-&ம் ஆண்டு முதல் வைக்கப்பட்டு இருந்த அக்னி கவசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது.
இதுபற்றி அறிந்த வன்னியர் சங்கம் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பா.ம.க.மாவட்ட செயலாளர் பக்தவத்சலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி நாயுடு மங்கலம் வந்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாயுடு மங்கலத்தில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட அக்னி கலசத்தை ஒரு வாரத்தில் வைக்கவேண்டும். இதற்கு உடந்தையாக செயல்பட்ட 2 அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
சுடுகாட்டு பிரச்சனை தொடர்பாக இருதரப்பினர் மோதல் ஏற்பட்ட வீரளூரில் அமைச்சர் எ.வ.வேலு திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்சனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்கள் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அருந்ததியின மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் அருந்ததியினர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன? அவர்களின் தேவை என்ன? என்பதை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில்:-
மன மாற்றம் ஒன்றே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.மனமாற்றம் இல்லை என்றால் பிரச்சனை அதிகரிக்கும். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். தற்போது உள்ள அரசு சாதி மதம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளார். இதனால் இன்று அருந்ததியின மக்கள் டாக்டர் களாகவும், பொறியாளர் களாகவும், பல்வேறு அரசு அதிகாரிகளாகவும் உள்ளனர். சாதி, மதத்தை பார்த்தால் எந்த கிராமத்திலும் வாழ் முடியாது.
உங்கள் பிரச்சினையை அறிந்தவுடன் முதல் அமைச்சரிடம் பேசி அரசு அதிகாரிகளை அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்தேன். உங்கள் கிராமத்தில் போலீசார் எத்தனை நாள் பாதுகாப்பு வழங்க முடியும்? உங்கள் மனதை தேற்றிக்கொண்டு போலீசாருக்கு விடை கொடுங்கள். இனி எந்த பிரச்சினையும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர் அங்கிருந்த 300&-க்கும் மேற்பட்ட மக்கள் மனுக்களை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மனுவில் கேட்கப்பட்ட அனைத்து தேவைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்த 100&-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் கூறுகையில்:-
கடந்த 15 நாட்களாக எங்கள் கிராமத்தில் ஒரு ஆண்கள் கூட இல்லை.இதற்கு யார் காரணம்? என்ன சம்பவம் நடந்தது? என்று எங்களுக்கு தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் தலைமறைவாகவும், எங்கள் அனைவரையும் குற்றவாளிகளாகவும் போலீஸ் தரப்பில் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசும் போது:-
நாட்டில் சாலைகள் யாருக்கும் சொந்தமில்லை.அரசாங்க சாலை அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது. பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
ஊர் மக்களின் நலன் கருதி அரசு தரப்பில் 10 நாட்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு செய்து இரு தரப்பிலும் சமாதானமாக செல்ல வேண்டும் என்றார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கலைநயமிக்க மரச்சிற்பங்கள் கரையானுக்கு இரையாகி வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப்போன மரங்களை அகற்றும் போது அதன் நினைவாக அழகிய மர சிற்பங்கள் அமைக்கப் பட்டன. பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மரச்சிற்பங்களை தமிழக நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வந்தது.
இந்த நிலையில் இந்த மரச்சிற்பங்கள் கவனிக்கப்படாத நிலையில் தற்போது கரையானுக்கு இரையாகி பரிதாபமாக காட்சி அளிக்கின்றன. கிரிவலப்பாதையில் வலம் வரும் பக்தர்கள் இந்த மர சிற்பங்கள் மிகவும் ரசித்து வந்தனர். அதன் முன்பு போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் சில மரச்சிற்பங்கள் உருக்குலைந்து போய் இருப்பது பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.எனவே மரச்சிற்பங்களை பாதுகாக்க தேவையான ரசாயன கலவைகளை பூச வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கிரிவலப்பாதையில் உள்ள சிற்பங்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் தண்டராம்பட்டு அணி வெற்றி பெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. விளையாட்டு போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் மற்றும் மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
24 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் திருவண்ணாமலை அணியும், தண்டராம்பட்டு அணியும் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.
இதில் தண்டராம்பட்டு வாலிபால் அணி வெற்றி பெற்றது. திருவண்ணாமலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வாலிபால் சங்க துணைத்தலைவர் சீனிகார்த்திகேயன் பரிசு கோப்பையினை வழங்கினார்.
வெம்பாக்கம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் பிரம்மதேசம் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரும் அய்யப்பன் என்ற போலீசாரும் ரோந்து பணிக்காக தென்னம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றனர்.
மாலை 6 மணி அளவில் வீர விநாயகர் கோவில் அருகில் சிலர் கும்பலாக நின்றிருந்தவர்களை விஜயகுமார் கொரோனா காலமென்பதால் கூட்டமாக நிற்க கூடாது கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.
அப்போது அந்த கும்பலில் இருந்த வினோத் குமார் (வயது 22) என்ற வாலிபர் சப்&இன்ஸ்பெக்டர் விஜயகுமாரை ஆபாச மாக பேசி கருங்கல்லால் பின்பக்க தலையில் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை மற்றொரு போலீசார் மீட்டு நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியின் தலைமையாசிரியராக அண்ணாமலை (வயது 58) என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் ஆசிரியர் செழியன் (50) (மாற்றுத்திறனாளி) என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் 9,10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஆசிரியராக உள்ளார் .இந்நிலையில் கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கொடியேற்று விழாவுக்கு காலதாமதமாக வந்த 5 ஆசிரியர்களை பள்ளி தலைமையாசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது .அதில் ஆசிரியர் செழியனும் ஒருவர்.
இதுதொடர்பாக கடந்த 27-ந்தேதி பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர் செழியனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது .அவர்கள் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து தாக்கிக் கொண்டனர் .இந்த சம்பவத்தைச் ஆசிரியர்கள் சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது .
தற்போது இந்த வீடியோ கலசப்பாக்கம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது .இந்த மோதல் குறித்து தகவலறிந்த போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் .பின்னர் விசாரணை தொடர்பான அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் வழங்கினார் .
இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம் ,பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் அண்ணாமலை, மாற்றுத் திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள திருபூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 46) விவசாயி இவர் உடல் நலக்குறைவால் அவதிபட்டு மன உளைச்சலில் இருந்தார்.
இதனால் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து அனக்காவூர் சப்&இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் 32-ம் ஆண்டாக காளைவிடும் விழா நடைபெற்றது.
விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிபாய்ந்து ஓடியது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை காளைகள் முட்டியதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் விஜயபாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள், துணை தலைவர் கௌதமி, முன்னாள் துணை தலைவர் முருகேசன், பெரியதனம் மாசிலாமணி, சண்முகம் மற்றும் விழாக்குழுவினர் வழங்கினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் கூடுதல் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், கூடுதல் துணை சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி இன்ஸ்பெக்டர்கள் நிலவழகன் (வேலூர் தாலுகா) முத்துக்குமார் (வேலூர் வடக்கு) உள்பட 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூசி அருகே மாணவனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்படார்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா ஹரிஹர பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் விஜி இவர் அப்பகுதியில்உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
விஜி சைக்கிளில் வீட்டின் அருகே நிற்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த எம்ஜிஆர் என்பவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது விஜியுடைய கால் பைக்கில் பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த எம்ஜிஆர் விஜியை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தூசி போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து எம்ஜிஆரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
கண்ணமங்கலம் அருகே பேக்கரி கடையில் புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் வேலூர் நோக்கி வேகமாக கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பேக்கரி கடையின் சுவற்றில் மோதியது.
இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீசார் காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு பகுதி அரசு பள்ளியில் படித்த 10 மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்வாகியுள்ளனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்த 10 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.
செய்யாறு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவிகளும், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களும், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவனும் தேர்வாகியுள்ளனர்.
செய்யாறு அரசு மாதிரி மகளிர்மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ சீட்டு கிடைத்த மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் எம்.உமாமகேஸ்வரி தலைமைத் தாங்கினார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ரவிகுமார், பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் எம்.சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்த மாணவி பி.கவிபிரியா, எஸ்.சுவாதி மற்றும் பல் மருத்துவம் சீட் கிடைத்த மாணவிகள் ஏ.கோட்டீஸ்வரி, எம்.ஆர்த்தி, எஸ்.யாமினி, கே.ஹரினி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் ஏ.நளினி இனிப்பு வழங்கி மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், ஊக்கம் அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.
திருவண்ணாமலை அருகே பள்ளியில் சண்டையிட்டது தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியின் தலைமையாசிரியராக அண்ணாமலை (வயது58) என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் ஆசிரியர் செழியன் (50) (மாற்றுத்திறனாளி) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவர் 9,10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஆசிரியராக உள்ளார்.
கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கொடியேற்று விழாவுக்கு காலதாமதமாக வந்த 5 ஆசிரியர்களை பள்ளி தலைமையாசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதில் ஆசிரியர் செழியனும் ஒருவர்.
இதுதொடர்பாக கடந்த 27-ந்தேதி பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர் செழியனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அவர்கள் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தைச் ஆசிரியர்கள் சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ கலசப்பாக்கம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.
இந்த மோதல் குறித்து தகவலறிந்த போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை தொடர்பான அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் வழங்கினார்.
இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம், பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் அண்ணாமலை, மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






