என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் பேக்கரி கடைக்குள் புகுந்த கார்.
    X
    பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் பேக்கரி கடைக்குள் புகுந்த கார்.

    பேக்கரி கடையில் புகுந்த கார்

    கண்ணமங்கலம் அருகே பேக்கரி கடையில் புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் வேலூர் நோக்கி வேகமாக கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பேக்கரி கடையின் சுவற்றில் மோதியது. 

    இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீசார் காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×