என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சஷ்டி விழா நடைபெறவில்லை
    • இன்று விழா தொடங்கியதும் உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருக்கோவில் ஆகும்.

    மேலும், ராமனிடம் அவரது மகன்களான லவா மற்றும் குசா என இரண்டு சிறுவர்கள் அம்பு எடுத்து போரிட்டதால் இந்த ஊருக்கு சிறுவாபுரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

    சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது. இம்மாதம் 8-ம் தேதி மண்டலபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

    இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது. இன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதன் பின்னர், உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துர்கா ஸ்டாலின் சகோதரி ஜெயந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், விருகை பிரபாகர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி தலைவர் ஜான்சிராணி தேவராஜ், துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பகலவன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சித்ராதேவி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • பட்டாசு குப்பைகள் உள்பட மொத்தம் 160 டன் குப்பைகளை ஊழியர்கள் அகற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டனர். இதில் பட்டாசு குப்பைகள் உள்பட மொத்தம் 160 டன் குப்பைகளை ஊழியர்கள் அகற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது ஆனந்த் ரெட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த புலி குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த ரெட்டி (வயது80). இவர் தீபாவளியையொட்டி கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் இன்று காலை அவர் பஸ்மூலம் திரும்பி பொன்னேரி பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது ஆனந்த் ரெட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
    • போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அம்பத்தூரில் உள்ள டெலிபோன் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரிடம் மதுவிலக்கு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் கேரளமாநிலத்தை சேர்ந்த விஷ்ணு(31) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஷ்ணுவை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • தீபாவளி பண்டிகை காரணமாக இந்த நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, அசோக் நகர் 2-வது அவின்யூவில் உள்ள ஒரே கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் 2 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகை காரணமாக இந்த நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் கீழ் தளத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அசோக் நகர் போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கும் தீ பரவியது இதனால் அதிர்ச்சி அடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலர் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    அசோக் நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீரை கொண்டு மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராபின் கேஸ்ரோ தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 2 நிறுவனங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரண பொருட்கள், 2 மினி வேன்கள் உட்பட 3 வாகனங்கள் ஆகியவை தீயில் கருகி நாசம் ஆனது.

    மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது பட்டாசு பொறி ஏதாவது பறந்து விழுந்து தீவிபத்து நடந்ததா என்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் அதே பகுதியில் பூ தொட்டிகளுக்கு நார் மற்றும் உரம் விற்பனை செய்யும் குடோன் வைத்து நடத்தி வந்தார். தீபாவளி பண்டிகை என்பதால் குடோனை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, விருகம்பாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த நார்கள், உரம் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும். பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமா என்று மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தணியில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட குடிசை எரிந்த சேதம் அடைந்தது. அங்கிருந்த லட்சம் மதிப்பிலான பூக்களால் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் எரிந்து சேதமானது.

    திருவள்ளூர் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வரும் வங்கியில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

    • சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது.
    • போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த விடையூர் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சிலர் அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களில் சீனிவாசன், ஜானகிராமன், விக்னேஸ்வரன், பாலாஜி, பார்த்திபன், ஆசான்பாஷா உள்பட 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழவேற்காடு கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலியான சம்பவம் உடன் வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்துச் சென்ற மீனவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    சென்னை திரிசூலத்தைச் சேர்ந்தவர் மதன் குமார். என்ஜினீயரான இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி உடன் பணிபுரியும் நண்பர்கள் என்ஜினீயரான அருண், எபினேசர் உள்ளிட்ட 10 பேருடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.

    பின்னர் அவர்கள் பழவேற்காடு கடலில் படகு சவாரி சென்றனர். அப்போது மதன் குமார், அருண், எபினேசர் ஆகிய 3 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர்.

    ஆழமான பகுதிக்கு சென்ற அவர்களை அலை இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றபோது எபினேசரை மட்டும் பத்திரமாக மீட்டனர். மதன் குமாரும், அருணும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தேடிவந்தனர்.

    இதற்கிடையே சிறிது நேரத்தில் அதே பகுதியில் மதன்குமார் உடல் பிணமாக மிதந்தது. தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கிய அருணை தொடர்ந்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலை கம்பில் அருணின் உடல் சிக்கியது. அவரது உடலை போலீசார் மீட்டனர். பழவேற்காடு கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலியான சம்பவம் உடன் வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்துச் சென்ற மீனவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எல்லம்மாளின் உடலை மீட்டு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
    • மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 75 ). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இரவு அவர் சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நேற்று காலை நீண்டநேரம் வரை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அதேபகுதியில் வசிக்கும் அவரது மகள் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் விரைந்து வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது எல்லம்மாள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவர் இயற்கையாக இறந்து இருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர். இதைத் தொடர்ந்து எல்லம்மாளின் உடலை மீட்டு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.

    அப்போது எல்லம்மாளின் காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மல் மாயமாகி இருந்தது. மேலும் அவரது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் மூதாட்டி எல்லம்மாளின் உடலை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று எல்லம்மாளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் எல்லம்மாளின் வலது காதில் கம்மல், மூக்குத்தி மற்றும் கழுத்தில் தங்கச் செயின் அப்படியே இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தண்டு மாநகர் பகுதியை சேர்ந்தவர் சரத் கைப்பந்து வீரர்.
    • சின்னமணியின் கூட்டாளிகளான சரண், மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம், தண்டு மாநகர் பகுதியை சேர்ந்தவர் சரத்(வயது22) கைப்பந்து வீரர். இவர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆரணி போலீசார் ஆரணி இருளர் காலனியை சேர்ந்த சின்ன மணியை கைதுசெய்தனர். விசாரணையில் கஞ்சா மற்றும் பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக சின்னமணியின் கூட்டாளிகளான சரண், மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை தொடர்ந்து ஆரணியில் உள்ள சின்னமணியின் சால்னா கடை நொறுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ரேலா மருத்துவமனை ஆற்றிய ஓராண்டு சேவைகள் குறித்து விளக்கப்படம் ஒளிபரப்பப்பட்டது.
    • செரியன் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனர் கே.எம். செரியன் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.

    திருவள்ளூர்:

    சோழவரம் அடுத்த பாடியநல்லூரில் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் எம்.எஸ். மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சரி செய்யும் ஆஞ்சியோகிராம் எனப்படும் சிகிச்சை முறையினை 1500 பேருக்கு செய்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையிலும் ரேலா மருத்துவமனையின் ஓர் ஆண்டு நிறைவிழாவை முன்னிட்டும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் எம்.எஸ். மருத்துவமனையின் நிறுவனரும் உலக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் முகம்மது ரேலா மற்றும் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனர் பத்மஸ்ரீ கே.எம். செரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கியதும் கண் கவர் பரதநாட்டியம் நடைபெற்றது. பின்னர் ரேலா மருத்துவமனை ஆற்றிய ஓராண்டு சேவைகள் குறித்து விளக்கப்படம் ஒளிபரப்பப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அப்பல்லோ இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செங்குட்டு வேலு மற்றும் டாக்டர் ஆனந்த் ஞானராஜ், ரேலா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பினை ரேலா மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் அசோக் குமார்,டாக்டர் அஸ்வாமி ஆகியோர் செய்து இருந்தனர். இதில் ஏராளமான மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் முன்னிலையில் இனிப்பு, அரிசி, புடவை,, வேஷ்டி வழங்கப்பட்டது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக காளிகாம்பாள் கோயில் அறங்காவலர் பழனியப்பன் பங்கேற்றார்

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும். ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் முன்னிலையில் இனிப்பு, அரிசி, புடவை, வேஷ்டி வழங்கப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காளிகாம்பாள் கோயில் அறங்காவலர் பழனியப்பன், ஜம்போ பேக் நிறுவன தலைமை பணியாளர் சதா, பிஜேபி மாவட்ட மீனவர் அணி தலைவர் சுப்பிரமணி, அண்ணாமலை கன்ஸ்ட்ரக்சன் நிறுவன தலைவர் ராஜ்கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்

    ×