

திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த விடையூர் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சிலர் அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
அவர்களில் சீனிவாசன், ஜானகிராமன், விக்னேஸ்வரன், பாலாஜி, பார்த்திபன், ஆசான்பாஷா உள்பட 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.