search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை நீரை வெளியேற்ற கோரி அவினாசியில் நடு ரோட்டில் படுத்து பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    சாக்கடை நீரை வெளியேற்ற கோரி அவினாசியில் நடு ரோட்டில் படுத்து பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

    • சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 448 குடியிருப்புகள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி சேவூர் ரோட்டில் உள்ள சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 448 குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய சாக்கடை வசதிகள் இல்லை என்று உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று காலை 9 மணியளவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்; குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களிடம் அவினாசி தாசில்தார், பேரூராட்சித் தலைவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இன்னும் 4 நாட்களில் முழுமையாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொகுதி எம். எல். ஏ, மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வர வேண்டும் அதுவரை போராட்டத்தை கை விட மாட்டம் என்று சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவினாசி -சேவூர் சாலைகளின் இரண்டு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கின்றன.

    Next Story
    ×