என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணாடி உடைந்த அரசு பஸ்ஸையும், பஸ் மீது மோதிய மயிலையும் படத்தில் காணலாம்.
பல்லடம் அருகே மயில் மோதி அரசு பஸ் கண்ணாடி உடைந்தது
- அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
- மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது.
திருப்பூர் :
பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திகுமார் ஓட்டி சென்றார். பஸ் பல்லடம் அடுத்த சின்னிய கவுண்டன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளானது.
மேலும் மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து டிரைவர் சக்திவேல் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வனத்துறையினருடன் இறந்த மயிலை மீட்டு சென்றனர். பின்னர் பயணிகளை வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Next Story






