என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆய்வு செய்த காட்சி.
நிழற்குடை அமைக்கும் பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆய்வு
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலிபாளையம் பகுதி 44 வது வார்டில் உள்ள கோம்பை தோட்டம் பகுதி பள்ளிவாசல் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ்,வடக்கு மாநகரக் அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபாளையம் பகுதி செயலாளர் மு .க .உசேன் , 44 வது வட்ட செயலாளர் ரபிக், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், திலகராஜ் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story