search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாட்டில் - கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தம்
    X

    கோப்புபடம்.

    பாட்டில் - கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தம்

    • பாஜக நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
    • காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களை கைது செய்து வருகின்றனா்.

    தாராபுரம் :

    கோவை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திருப்பூரில் பா.ஜ.க. நிா்வாகியின் வீடு என நினைத்து மில் அதிபரின் வீட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களைக் கைது செய்து வருகின்றனா்.

    மேலும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிக் கொடுக்க மறுத்து வருவதோடு, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என விழிப்புணா்வு நோட்டீசும் ஒட்டி வைத்துள்ளனா்.

    Next Story
    ×