search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் போடும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

     கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்.

    உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் போடும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • விநாயகர் கோவில் கிணற்றில் வைக்கப்பட்டிருந்த திருக்கம்பம் வெளியே எடுக்கப்பட்டது.
    • 6 ந் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜைகள் நடைபெறவுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சின்னவீர ன்பட்டியிலிருந்து கொண்டு வரப்பட்டு உடுமலை பஸ் நிலையம் அருகிலுள்ள சுந்தர விநாயகர் கோவில் கிணற்றில் வைக்க ப்பட்டிரு ந்த திருக்கம்பம் வெளியே எடுக்கப்பட்டது.பின்னர் மஞ்சள் பூசி செவ்வரளி, மல்லிகை, செண்பகம் உள்ளிட்ட மலர்களா ல் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் அதனையடுத்து மேள தாளத்துடன் பக்தி கோஷங்கள் முழங்க ஊர்வலமாக திருக்கம்பம் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் சன்னதியைச் சுற்றி வலம் வந்து கோவில் கொடி மரத்துக்கு முன் நடப்பட்டது.

    பின்னர் பூவோடு எடுத்து சன்னதியை 3 முறை வலம் வந்து கம்பத்தில் வைத்து கம்பத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்துக்கு பால், சந்தனம்,மஞ்சள் கலந்த நீர் உள்ளிட்ட புனித நீர் ஊற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினசரி பக்தர்கள் திருக்கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்வார்கள்.மேலும் வரும் 6 ந் தேதி (வியாழன்) இரவு 12 மணிக்கு வாஸ்து சாந்தி,கிராம சாந்தி பூஜை கள் நடைபெ றவுள்ளது. 7 ந் தேதி மதியம் 12 மணிக்கு கொடியே ற்றத்துடன் பூவோடு ஆரம்ப மாகிறது. விழாவின் உச்சகட்ட மாக தேர்த்திருவிழா வரும் 13ந் தேதி(வியா ழக்கிழமை) மாலை 4.15 மணிக்கு நடைபெ றவுள்ளது. மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழா தொடங்கி யதையடுத்து உடுமலை நகரமே விழா க்கோலம் பூண்டு பரபரப்பாக காணப்ப டுகிறது.

    Next Story
    ×