search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் - திருப்பூர் மாவட்டத்தில்   பலத்த போலீஸ் பாதுகாப்பு வாகன சோதனை தீவிரம்
    X

    திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பைத படத்தில் காணலாம்.

    கோவையில் கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் - திருப்பூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வாகன சோதனை தீவிரம்

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே கோவை மாவட்டத்தின் அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்திலும் சம்பவம் தொடர்பாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் நேரடி மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள் ,4 உதவி கமிஷனர்கள் தலைமையில் மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோல் வெளிமாவட்டத்தில் இருந்து வருகிற கார்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் போன்றவற்றிலும் சோதனை நடந்து வருகிறது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோல் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினாலோ அல்லது பொதுமக்களுக்கு அவ்வாறு தோன்றும் நபர்கள் யாரையாவது பார்த்தாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×