search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்  விவகாரம் -   அதிகாரிகளுடன் சாயப்பட்டறை  வீதி  பொதுமக்கள் வாக்குவாதம்
    X

    அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

    ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் விவகாரம் - அதிகாரிகளுடன் சாயப்பட்டறை வீதி பொதுமக்கள் வாக்குவாதம்

    • அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாயப்பட்டறை வீதி நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யச்சொல்லி, நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை நடந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்காததால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×