search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க கோரிக்கை
    X

    உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து.

    மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க கோரிக்கை

    • கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்
    • டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம் சார்பில் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    இதனால் சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைதியாக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு சார்பில் குண்டர் சட்டம் போடப்பட்டது.

    இதற்கு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு பின்னர் அரசு குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றது. விவசாயிகள் கஞ்சா கடத்தவில்லை, சாராயம் விற்கவில்லை, அவர்களுடைய சொந்த நிலத்தை காப்பாற்ற தான் போராடுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது எந்த விதத்தில் நியாயம் இல்லை. விவசாயிகளை நசுக்கும் எந்த அரசும் நன்றாக இருந்த தில்லை. இதனை தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் ஏராளமான பொட்டல் காடுகள் இருக்கையில் விவசாய நிலங்களில் சிப்காட் போன்ற திட்டங்களைக் கொண்டு வராமல், மாற்று வழிகளை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். இந்த பருவ மழை காரணமாக டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். குண்டர் சட்டம் போடும் வேகத்தை இழப்பீடு வழங்குவதிலும் தமிழக அரசு காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×