search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு  காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் -   பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவு
    X
    கோப்புபடம். 

    மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் - பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவு

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அங்குள்ள பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
    • தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் குறித்த விவரத்தையும் சேகரித்து, கண்காணித்து வருகிறோம்.

    அவிநாசி:

    தற்போது பல இடங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பொதுமக்கள் குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவிநாசி பகுதியிலும், காய்ச்சல் பரவல் ஆங்காங்கே தென்படுகிறது.அவிநாசி சுகாதாரத்துறையினர் சார்பில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அங்குள்ள பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

    இது குறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கிறோம். அதோடு, அந்த ஊரில் வசிக்கும் கிராம மக்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கிறோம். அவ்வாறு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் மருத்துவரின் பரிந்துரைக்கு சிபாரிசு செய்கிறோம்.

    தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் குறித்த விவரத்தையும் சேகரித்து, கண்காணித்து வருகிறோம். அவிநாசியை பொருத்தவரை காய்ச்சல் பரவல் இருந்தாலும், பெரிய அளவில் அச்சப்படும் வகையில் இல்லை.பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், பள்ளி நிர்வாகங்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கு சிறப்பு கவனம் செலுத்தி மருத்துவ பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×