என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை.
பல்லடத்தில் நாளை நடக்கிறது: பா.ஜ.க.சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்
- இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.
- சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
பல்லடம்:
பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் நாளை 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மாலை 4மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.இதையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.சீனிவாசன், ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறியதாவது: - தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை , சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நாளை பல்லடத்தில் தாமரை மாநாடு என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
மங்–க–லத்தை அடுத்த மலைக்–கோ–வில் பகு–தி–யில் மாநாடு குறித்த பிர–சார வாக–னம் கடந்த 12-ந்தேதி முதல் தொடங்கப்–பட்டு நடை–பெற்று வரு–கிறது. பொது–மக்–க–ளுக்கு துண்டு பிர–சு–ரம் வழங்–கப்–பட்டு வரு–கிறது.
மாநாட்டில் பங்கேற்க நூதன முறையில், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் விசிட்டிங் கார்டில், மாநாடு நடைபெறும் இடம், தேதி அச்சிட்டு மாநாட்டிற்கு வரும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். அவிநாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.






