search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன வெங்காயத்திற்கு  விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
    X

     தோட்டத்தில் இருப்பு வைக்கப்பட்ட சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படும் காட்சி.

    சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

    • மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள்.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10க்கு விற்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள். தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் ரூ.50 வரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. உரங்களின் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 60 க்கு மேல் விற்றால் ஒரு அளவு லாபம் பெற முடியும். மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×