search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் -  அண்ணாமலையிடம் விவசாயிகள் மனு
    X
    கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்ற காட்சி. 

    உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் - அண்ணாமலையிடம் விவசாயிகள் மனு

    • அப்போது உழவாலய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க அனுமதி பெற்றுத் தரவேண்டும் என செல்லமுத்து வேண்டுகோள் விடுத்தார்.
    • இந்த நிகழ்ச்சியில், மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் தாமரையின் மாநாடு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை பல்லடம் வருகை தந்தார். முன்னதாக பல்லடம் அருகே உள்ள கோடங்கி பாளையத்தில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலயத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்துவை சந்தித்தார். அப்போது உழவாலய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க அனுமதி பெற்றுத் தரவேண்டும் என செல்லமுத்து வேண்டுகோள் விடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு, விளைபொருட்களை பாதுகாக்க கிடங்குகள், பருத்தி ஏற்றுமதி, சின்ன வெங்காய ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அண்ணாமலையிடம்அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், மகளிர் அணி செயலாளர் கே.சி. எம்.பி. சங்கீத பிரியா இளைஞரணி செயலாளர் கணேசன், ஊடகப் பிரிவு செயலாளர் ஈஸ்வரன், மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×