search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களைக்கொல்லி மருந்தால் கருகிய பயிர்கள்-   இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    களைக்கொல்லி மருந்தால் கருகிய பயிர்கள்- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

    • வேளாண் துறை, வேளாண் பல்கலை, மண், நீர், பயிர் மற்றும் பயன்படுத்திய மருந்து ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
    • வேளாண் துறை, வேளாண் பல்கலை, மண், நீர், பயிர் மற்றும் பயன்படுத்திய மருந்து ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் உகாயனூர் - நல்லகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவர் தனது தோட்டத்துக்கு பயன்படுத்திய களைக்கொல்லி மருந்தால், பயிர்கள் முளைக்கவில்லை. இதேபோல் பல விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து, விவசாயிகள் இணைந்து பிப்ரவரி மாதம் கலெக்டரிடம் புகார் அளித்ததால் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இது குறித்து சங்கர் கூறியதாவது:-

    இயற்கை உரங்களை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். 2 ஏக்கர் நிலத்தில் கம்பு பயிர் செய்ய திட்டமிட்டு முன்கூட்டியே தனியார் களைக்கொல்லி மருந்து தெளித்தேன். மருந்து தெளித்த ஒரு வாரத்தில் பயிர்கள் அனைத்தும் கருகின.புகார் அடிப்படையில் வேளாண் துறை, வேளாண் பல்கலை, மண், நீர், பயிர் மற்றும் பயன்படுத்திய மருந்து ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

    ஆய்வுக்குபின் களைக்கொல்லி மருந்து தரமானது என அறிக்கை வந்துள்ளது.களைக்கொல்லி மருந்து பயன்படுத்தி பின் 6 மாதங்களாக எந்தவிதபயிர்களும் முளைக்கவில்லை. மண் மலடாகி விட்டது. ஆனால் அதிகாரிகள் ஆய்வில் எதிர்மறையான அறிக்கை அளித்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.மாவட்ட நிர்வாகம் இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×