என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து உடுமலையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
- நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடுமலை:
தமிழக சட்டசபையின் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை சட்டமன்றத்தில் சபாநாயகர் அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்துதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆணைக்கிணங்க உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்ட இணைச்செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் சுரேஷ் பொன் முத்துலிங்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம், நகர துணைச்செயலாளர் ஆறுமுகம் ,நகர நிர்வாகிகள் சரண்யா தேவி ,அண்ணா தொழில் சங்கம் தாமோதரசாமி ,ஐ.டி. விங் தலைவர் சுப்ரமணியன் ,பெரியகோட்டை துணை தலைவர் விஸ்வநாதன், வார்டு செயலாளர்கள் வனிதா மணி, மகாலட்சுமி ,இளங்கோவன், காளிதாஸ், சுப்பிரமணி, ரஞ்சித் குமார், செல் சேகர், மணிவண்ணன் ,ருத்ரேஸ்வரன் ,ஜெயான், எல்ஐசி. சின்னச்சாமி, ரவிசங்கர்,
அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் ,அண்ணா தொழிற்சங்க தினசரி மார்க்கெட் நிர்வாகிகள் ,சந்தை வேலாயுதம், சரவணன்,நகர்மன்ற உறுப்பினர்கள் சகுந்தலா, மதிவாணன், சௌந்தரராஜன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய ஐடி. விங் ஜாகிர் உசேன், வினோத்குமார், ஆட்டோ ரமேஷ், கோபால் ,கன்னிமுத்து, வேலுச்சாமி, ஆசாத் உசேன், முகமது, பழனிச்சாமி மற்றும் சிடிசி. சதீஷ்குமார் ,ரத்தினசாமி ,அசோக்குமார், காடேஸ்வரன், கதிர்வேல், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், சார்பு பணி நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.






