search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் - விசைத்தறியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - விசைத்தறியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

    • போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.
    • உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது.உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறிவித்த மின் கட்டண உயர்வில் இருந்து 50 சதவீதத்தை அரசு குறைத்தது. மேலும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக வழங்கவும் அறிவிப்பு வெளியானது.

    போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதை தவணை முறையில் செலுத்த அவகாசம் வேண்டும் என விசைத்தறியாளர்கள், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விசைத்தறியாளர் கோரிக்கையை ஏற்று தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    தற்போது பயன்பாட்டில் உள்ளதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் என்ற முறையில் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். விசைத்தறியாளர் நலனை கருத்தில் கொண்டு அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மீண்டும் மின் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    Next Story
    ×