என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
எலி மருந்து சாப்பிட்டு புதுப்பெண் தற்கொலை

- மணிமேகலை கடும் வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
- 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 32) என்பவருக்கும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அருகே உள்ள வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமேகலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதனை யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.