search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.


    மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×