search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வீடுகள்தோறும் விழிப்புணர்வு
    X

    பெற்றோர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்ட காட்சி.

    பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வீடுகள்தோறும் விழிப்புணர்வு

    • 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதுடன் மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது.

    உடுமலை :

    சாமானிய மனிதனையும் சக்தி வாய்ந்த நபராக மாற்றும் ஆற்றல் பெற்றது கல்வி. இதன் மூலமாக சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சரிசமமான நிலையும் உருவாகிறது.கல்வியில் மேன்மை அடைவதன் மூலம் குடும்பம், மாநிலம், நாடும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதுடன் தன்னிறைவையும் அடைய முடியும். இதனால் கல்வியின் முக்கியத்துவம் மகத்துவம் குறித்து எடுத்துக் கூறி அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.

    அந்த வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல் படியும் திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வித் துறையின் அறிவுரையின் படியும் தொடக்கப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பாக பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அப்போது அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் தமிழ்வழிக் கல்வியின் மகத்துவம், முக்கியத்துவம் குறித்தும் தலைமை ஆசிரியை சாவித்திரி, ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பெற்றோர்களுக்கு எடுத்து கூறினர். அதைத்தொடர்ந்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதுடன் மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி வயது குழந்தைகளை தவறாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×