என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் திருப்பூரில் நாளை ஆர்ப்பாட்டம் - மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் அறிக்கை
    X

    ஈ.தங்கராஜ்.

    இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் திருப்பூரில் நாளை ஆர்ப்பாட்டம் - மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் அறிக்கை

    • திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    • இந்தி திணிப்பு மற்றும் பொது நுழைவு தேர்வுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாய இந்தி திணிப்பு மற்றும் பொது நுழைவு தேர்வுகளை கண்டித்தும், உடனே திரும்ப பெறக்கோரியும், திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கிறது.

    இதில் திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்களும், மாநகர, ஒன்றிய, நகர பகுதி பேரூர் கழக அமைப்பாளர்களும், துணை அமைப்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டம், ஊராட்சி, கிளைகள், வார்டுகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தி.மு.க. இளைஞரணியினருடன் பெரும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×