search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    102 மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு
    X

    திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் 2023 - 24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் தினேஷ் குமார் தாக்கல் செய்தபோது எடுத்த படம்.

    102 மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு

    • கடந்த ஆண்டு தனியார் பங்களிப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது.
    • நடமாடும் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டு தினசரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி யின் 2023 -2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்று மாநக ராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதா வது:- திருப்பூர் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முதன்மை பெற்ற மாவட்ட மாக திகழும் இந்நேரத்தில் கல்வி வளர்ச்சியில் அதிகஅக்கறை கொண்ட தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை கல்விக்கா கவும், மாணவர் நலனுக்கா கவும் செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி க்கு உட்பட்ட 11 மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 49 கூடுதல் வகுப்ப றைகள் மற்றும்25 கழிப்பறைகள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 75 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 25 கழிப்பறைகள் பொது மக்களின்பங்களிப்புடன் கட்டுவதற்கு 2023-24 ம் நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சிப் பள்ளி களில் புதிதாக 50 ஸ்மார்ட் வகுப்ப றைகள் உரு வாக்க ப்படும். மேலும் கடந்த ஆண்டு தனியார் பங்களி ப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது. 2023-24ம் ஆண்டில் 200 கணி ணிகள்வழங்கப்பட்டு மாணவர்களின் தொழில்நுட்பத்திறன் மேம்படுத்தப்படும்.

    2023-24ம் நிதி யாண்டில் மூன்று மாநக ராட்சி பள்ளி களி ல்மா ணவர்களின் கல்வித்திறன் மேம்பட தனியார் பங்களி ப்புடன் கூடியநூலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆண்டுதோறும் படிப்படியாக விரிவு படு த்தப்படும். நடமாடும் நூலகம் ஒன்றுஉருவா க்கப்பட்டு தினச ரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும். தமிழக முதலமைச்சர் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறி வித்துள்ளார். அதனடிப்ப டையில்2023-24 ம் நிதி யாண்டில் 102 மாநக ராட்சிப் பள்ளிகளில் பயிலும்19824 மாணவர்க ளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கிட 1.10 கோடிரூபாய் மதிப்பீட்டில் நான்கு இடங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் கட்டிடம் கட்டுவதற்குஎதிர்வரும் கல்வியா ண்டில்மாந கராட்சி பள்ளிகளில் துவங்கப்படும். திருப்பூர்மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றல் கல்வியினை தவிர்க்க ஏழைபள்ளிக் குழந்தை களின் பசியினை போக்க வும், கல்விச்சாலைக்கு வந்துகல்வியறிவு பெற்றிடவும், சமூகத்தில் முன்னேறி டவும்சிற்று ண்டி" வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமை ச்சருக்கு நன்றித்தெரி விப்பதில் பெருமை யடைகிறேன். மாநகராட்சி பள்ளி களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்விபயிலும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களில்அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறும் மாணவ ர்களுக்குஅவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளிக்கா சுகள் பரிசாக வழங்கப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் நாம் பொறுப்பேற்ற பிறகு நமக்கு நாமேதிட்டத்தில் தமிழ கத்தில் 7-ம் இடத்திலிருந்து தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறோம். மக்களின் சுய உதவி சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பரவலாக்கவும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தில்" திருப்பூர் மாநகராட்சி தமிழகத்தில் முதலாவது இடம் பெற்றுள்ளது. வளர்ச்சிபணிகளுக்கான திட்டமிடுதலில் தொடங்கி,வள ஆதாரங்க ளைதிரட்டுதல் பணிகளை மேற்கொள்ளுதல்மற்றும் மேற்பார்வைசெய்தல் போன்ற அனைத்து பணிகளிலும் மக்கள் பங்களி ப்பினை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2022-23 ம் ஆண்டில் 41 பணிகள் நடைபெற்றுள்ளது.திருப்பூரில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10.73 கோடி ரூபாய் பொது மக்களின் பங்களிப்புடனும்,மாநில அரசின் 21.47 கோடி ரூபாய் பங்களிப்புடனும், புதியதாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் நிர்வாக அனுமதி பெற நகராட்சி நிர்வாகஇயக்குநர் அவ ர்களுக்கு கருத்துரு அனுப்ப ப்பட்டுள்ளது. 2023-24 ம் நிதியாண்டில் புற்றுநோய் மருத்துவமனைக்கு பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கு வதற்கு பொதுமக்கள் பங்களிப்பு மூலம் 20.00 கோடி ரூபாயும், அரசின் பங்களிப்பு மூலம் 40.00 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 60.00 கோடி ரூபாய்மதிப்பீட்டில் நிறுவவும்,பொது மேம்பாட்டு பணிகளுக்காக 20.00கோடி ரூபாய் திட்ட மதிப்பீடும் ஆக மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் செயல்படுத்தப்பட்டு தொடர்ந்து 2023-24 ம் ஆண்டிலும் நம் மாநகராட்சி முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மாநகரில் தெருவிளக்கு 17.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8681புதிய தெரு மின்விளக்குகளும், 4755சோடியம் ஆவி விளக்குகளை மின்சிக்கன விளக்குகளாக 2023-24ஆம் ஆண்டில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் உயர்கோபுர மின்விளக்குகள் 28இடங்களில் அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். ஏற்கனவேசெயல்பாட்டில் உள்ள சோடியம் ஆவி விளக்குகளை பராமரித்திடசிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக மூலம் பிரித்து வழங்கி திருப்பூர்மாநகரத்தை ஒளிர வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் ஏ.எம்.ஆர்.யூ.டி. திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணி 1120.57 கோடி ரூபாய் மதிப்பீ ட்டில்மேற்கொ ள்ளப்பட்டு 94 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில் நான்காவது குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டு சோதனைஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டம்கடந்த மாதத்தில்திருப்பூர் வடக்குப் பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு சோதனை ஓட்டமாககொண்டு வரப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்திற்குள்தெற்குப் பகுதிக்கு விரிவுப்படு த்தப்பட்டு விரைவில் செயல்பாட்டி ற்குகொண்டு வரப்படும். SCADA (Supervisory Control and DataAcquisition) மேற்பார்வை கட்டுப்பாட்டு தரவு கையகப்படுத்துதல்திட்டம், முதலில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனைஅடிப்படையில் செயல்பட்டு வருகிறது.இத்திட்டம் மேலும்விரிவாக்கப்பட்டு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக ளுக்கும் inflow and outflow 100 சதவீதம்மேற்பார்வை செய்யப்பட்டு குடிநீர் சீராக விநியோகம் செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்களுக்கு நீர்த்தட்டுப்பாடு இல்லாமல் மாநகராட்சிப் பகுதிகளில்நீராதாரத்தை ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய்கிணறுகள் அமைத்துசெய்யப்ப ட்டுள்ளது.மேலும் தேவைப்படும்தண்ணீர் வசதிபகுதிகளுக்கு புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்.தமிழகத்திலேயே முதன் முறையாகதிருப்பூர் மாநகராட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில்குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை"குறுஞ்செய்தி" (SMS) மூலமாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தெரியப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    மாநகரில் சுகாதார பிரிவில் ஏற்கனவே 17 ஆரம்ப சுகாதாரமையங்கள் உள்ளது. மேலும் ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் குளத்துப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.14 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் மகப்பேறுசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 34 நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்படும். நமக்கு நாமே திட்டத்தில் மருத்துவ சேமிப்புகிடங்கு 27.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டி.எஸ்.கே.மருத்துவமனை வளா கத்தில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்டுள்ளது.மாநகராட்சியில் புதிதாக மருந்து கிடங்கு மங்கலம் சாலையில்அமைக்க ப்படவுள்ளது.எஸ்.ஆர்.நகர் பகுதியில்தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 51 துணை சுகாதார நிலையம் 60 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் மூன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு வரும்கர்ப்பிணித் தாய்மா ர்களுக்கு முன் பேறுகால பரிசோதனை கள்செய்வதற்கு தேவைப்படும் அல்ட்ரா சவுண்ட் இஸ்கேனர் (UltraSound Scanner) கருவி புதியதாக அமைக்கப்படும்.

    இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொன்னம்மாள்ராமசாமி மகப்பேறு மருத்துவ மையம் (PRMH) மற்றும் வீரபாண்டிஆரம்ப சுகாதார நிலையங்களில் 60.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டும். மேலும் மூன்று ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கூடுதல் கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி வேண்டிகருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். "நடமாடும் இரத்த பரிசோதனை கூடம்" அறிமுகப்படுத்தப்படும்.

    திருப்பூர் மாநகரில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் வீடு இல்லாத ஏழைகள் தங்குவதற்கு வசதியாக இரவு நேர தங்கும் விடுதி மற்றும் புதிய கழிப்பிடங்கள் 1.41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.மாநகராட்சிக்கு சொந்தமான மனைப்பிரிவுகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு நீச்சல் குளமும்அண்ணா காலனியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்

    ஆண்டிபாளையத்தில் உள்ள குளத்தை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து படகு சவாரி மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .இந்த நிதி ஆண்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தொழில் நகரமான திருப்பூரில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் 64.20 லட்சம் மதிப்பில் பொருத்தப்படும்.

    வளர்ந்து வரும் நம் திறன் மிகு திருப்பூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நொய்யல் நதிக்கரையின்இருபுறமும் 6.70 கி.மீ. நீளத்திற்கு தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இருபுறமும் 5 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் பாலம் மற்றும் நடராஜ் தியேட்டர் பாலம் மற்றும் தந்தைபெரியார் நகர் பாலம், சங்கிலிப் பள்ளம் ஓடையின் குறுக்கே புதியபாலங்கள் அமைக்க 36.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் புதிதாக ஒரு இரயில்வே மேம்பாலம் அமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்படும்.பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் சேதமடைந்த சாலைகளைபோர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுமார் 150 கோடிக்கும் குறையாமல் அரசு நிதி பெறப்பட்டு இந்த நிதியாண்டில் சாலைகள் புனரமைக்கப்படும்.

    "சீர்மிகு நகரம் சிறப்பான நகரம் - நம் திருப்பூர் மாநகரம் "எல்லா நாடுகளிலும் நகரங்களின் வளர்ச்சியே பொருளாதாரவளர்ச்சிக்கு வினையூக்கியாக உள்ளது. ஒரு செயல்முறை அல்லது தொடர் நடவடிக்கைகள் மூலமாக நகரங்களைத் தொடர்ந்து வாழ தகுந்த மாநகரமாக மாற்றி, புதியசவால்களுக்கும் உடனடித் தீர்வு காணும் திறன் பெற்றதாக 986.05 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் இச்சீர்மிகு நகரத்திட்டத்தில்மதிப்பீட்டில் உத்தேசிக்கப்பட்ட 28 பணிகளில் 21 பணிகள்முடிவடைந்துள்ளது.

    மீதமுள்ளஅனைத்துபணிகளும் விரைவில்முடிக்கப்படும். முடிவடைந்துள்ள பணிகளில் 7.19 கோடி ரூபாய்அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நம் திருப்பூர் சீர்மிகு வாழிடமாக மாறியுள்ளது என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 2 மூன்றாம் நிலை நகராட்சிகள் 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர்பகுதிகள் மற்றும் 8 ஊராட்சி பகுதிகளில் உள்கட்டமை ப்புகளையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட சிறப்பு நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×