என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் அருகே வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கைது
- பாண்டிச்சேரிக்கு கறிக்கோழி கொண்டு சென்று விட்டு வேனில் மீண்டும் பொங்கலூர் வந்துள்ளார்.
- 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொட்டம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் செல்லமுத்து (வயது30). இவர் பாண்டிச்சேரிக்கு கறிக்கோழி கொண்டு சென்று விட்டு வேனில் மீண்டும் பொங்கலூர் வந்துள்ளார்.
அப்போது வேன் காட்டூர் அருகே வந்தபோது காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். செல்லமுத்து ஓட்டி வந்த வேனை சோதனையிட்டதில் அதில் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வந்த 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து செல்லமுத்துவை கைது செய்த போலீசார் மது பாட்டில் மற்றும் மது பாட்டில் கடத்தி வந்த வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். செல்லமுத்து மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story






