என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பெண் ஓட்டி வந்த கார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மோதி விபத்து
- வாகனங்கள் மங்கலம் - பல்லடம் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.
- இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
திருப்பூர் :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பொங்கலூரில் நடந்த கட்சி பிரமுகர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி நேற்று வந்தார். காலை 11 மணி அளவில், அவருக்கு திருப்பூர் அடுத்த மங்கலம் நால் ரோடு அருகே, கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
இதனால் வாகனங்கள் மங்கலம் - பல்லடம் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த கார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் இடது காலில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் மீது மோதிய பெண் குறித்து விசாரித்துவருகின்றனர்.
Next Story