என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீர்த்தவாரி நடந்தது.
திருநல்லூர், கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
- நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் நீராடி வழிபட்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே திருநல்லூரில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் கிரிசுந்தரி அம்மன் உடனுறை கல்யாணசுந்தரேஸ்வரர் கோவலில் மாசி மகப் பெருவிழாவை யொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநல்லூர் மாசி மகம் நட்சத்திர நாளான திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் திருக்குளத்தில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி உள்ளிட்ட நீர்க்கடலை செலுத்தினர்.
விழாவையொட்டி அஸ்திரதேவர், விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், பார்வதி அன்னை மற்றும் கிரி சுந்தரி அம்மன் உள்ளிட்டோர் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோயில் திருக்குளத்தை சுற்றி உள்ள நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தனர்.
இதனை தொடர்ந்து கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து கோவில் குளத்தில் தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி சுவாமியை தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சரிய சுவாமிகள் ஆணையின்படி கட்டளை தம்பிரான் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோவில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






