என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கட்டிப் போட்டு தாக்கிய பொதுமக்கள்
    X

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கட்டிப் போட்டு தாக்கிய பொதுமக்கள்

    • படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (38). இவர்அதே பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் 3 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார்.

    இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபாலை சுற்றிவளைத்து பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோபாலை மீட்டு கைது செய்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×