search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மத்திய சிறை வளாகத்தில்  செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார்
    X

    கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார்

    • வ.உ.சி உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற ஆலோசிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • செம்மொழிப் பூங்கா முதல்கட்டமாக 45 ஏக்கரில் அமைகிறது.

    கோவை,

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறையை இடமாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்டது.

    பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், கோவையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு, தற்போது சிறை உள்ள இடத்தில் செம் மொழிப்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இதையடுத்து மத்திய சிறை அமைப்பதற்காக 120 ஏக்கர் இடம் இருந்தால் தெரிவிக்குமாறு கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தால், மாவட்ட வருவாய் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பலகட்ட ஆய்வுக்குப்பின் காரமடையில் சுமார் 100 ஏக்கர் இடம் உள்ளதாக வருவாய் துறையினர், சிறைத் துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, சிறை வளாகத்தில் மாநகராட்சி வசம் உள்ள 45 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-செம்மொழிப் பூங்கா முதல்கட்டமாக 45 ஏக்கரில் அமைகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.

    அதற்காக காத்திருக்கிறோம். திட்ட அறிக்கையை இறுதி செய்து, விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோர உள்ளோம். அதேபோன்று வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களை இடமாற்றம் செய்துவிட்டு, பறவையினங்களை மட்டும் கொண்டு செயல்படுத்தலாமா? என ஆலோசிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×