என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டலம் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
- கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் பஜார் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சேகர்(வயது43) ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியலில் இருந்த ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேகர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.






