என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடன் தொல்லையால் திருமணம் நிச்சயமான பெண் தற்கொலை
    X

    கடன் தொல்லையால் திருமணம் நிச்சயமான பெண் தற்கொலை

    • கடன் பிரச்சினையால் ஜெயந்தி தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
    • தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயித்து இருந்தனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து திருமண அழைப்பிதழ்களை ஜெயந்தியின் பெற்றோர் உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் ஜெயந்தியின் பெற்றோர் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றனர். வீட்டில் ஜெயந்தி மட்டும் தனியாக இருந்தார். பெற்றோர் திரும்பி வந்தபோது வீட்டில் மகள் ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடன் பிரச்சினையால் ஜெயந்தி தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×