என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூண்டில் பாலம் பகுதிகளை பார்வையிட்ட விஜய் வசந்த்
    X

    தூண்டில் பாலம் பகுதிகளை பார்வையிட்ட விஜய் வசந்த்

    • வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
    • விஜய் வசந்துடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரியில் வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் தேவாலயம் மற்றும் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு அருகாமையில் உள்ள தூண்டில் பாலத்தில், கடல் அலைகள் எப்போதும் வேகமாக மோதும் பகுதியில் உள்ள பாறைகள் அகன்று சிதறி உள்ள நிலையில் வாவத்துறை மீனவ மக்களின் அழைப்பை ஏற்று பாதிக்கப்பட்டுள்ள தூண்டில் பாலம் பகுதிகளை இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பார்வையிட்டார்.

    வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் ஆட்லின், முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ், ஊர் தலைவர் வர்க்கீஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×