search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி ஆசிரியை கொலையில் அண்ணன் மகன் கைது
    X

    உடன்குடி ஆசிரியை கொலையில் அண்ணன் மகன் கைது

    • மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
    • பட்டப்பகலில் நடந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு பகுதியை சேர்ந்தவர் ரஸ்கின்டிரோஸ். இவரது மனைவி மெட்டில்டா (வயது 55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுடைய மகன் சென்னையிலும், ரஸ்கின்டிரோஸ் மும்பையிலும் வசித்து வருகின்றனர். இதனால் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் உள்ள வாடகை வீட்டில் மெட்டில்டா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் மெட்டில்டா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து உடன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்தவர்கள், நேற்று மதியம் மெட்டில்டாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம் என கூறினர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மெட்டில்டாவை கொலை செய்தது அவரது அண்ணன் மகனான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்தருவை பகுதியை சேர்ந்த ஜெயதீபக் (வயது35) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீசில் கூறியதாவது:-

    எனது அத்தையான மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நான் உடன்குடியில் தங்கியிருந்து அத்தைக்கு வீட்டுவேலை போன்ற உதவிகளை செய்து வந்தேன். நான் அவ்வப்போது அவரிடம் செலவிற்கு பணம் கேட்பேன். அந்த வகையில் நேற்றும் செலவிற்கு ரூ. 10 ஆயிரம் தருமாறு மெட்டில்டாவிடம் கேட்டேன்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த நான் தலையணையால் அவரது முகத்தை அழுத்தி கொலை செய்தேன். இதனால் கத்தி கூச்சலிட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பின்னர் நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×